ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 113 பேர் உயிரிழந்ததால் இந்நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.
தடுப்பு மருந்து தெளிக்கும் ஊழியர்கள்
தடுப்பு மருந்து தெளிக்கும் ஊழியர்கள்
Published on

டெஹ்ரான்:

சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரசால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

ஈரான் நாட்டில் மந்திரிகள் உள்பட சில முக்கிய பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில் பல அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்நாட்டு மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 113 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும், கொரோனா பலி எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்து வீட்டில் இருக்க வேண்டும் என ஈரான் அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com