இந்தியா- இங்கிலாந்து இடையே ஜனவரி 6 முதல் விமான சேவை: ஹர்தீப் சிங் பூரி

இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் 6-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி
விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் உலக நாடுகள் போக்குவரத்துக்கான தடைகளை மெதுவாக தளர்த்தி வந்தன.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத் தொடங்கின. இதனால் பெரும்பாலான நாடுகள் இங்கிலாந்துக்கான விமான சேவைகளை உடனடியாக ரத்து செய்தன. இந்தியாவும் ரத்து செய்துள்ளது. 

இதற்கிடையே, இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். வாரத்திற்கு இரு மார்க்கமாக 30 விமானங்கள் இயக்கப்படும் எனவும், இந்த நடைமுறை ஜனவரி 23ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் 6-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com