சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு உத்தரவு

தேவை அதிகரிப்பு காரணமாக ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் வைரஸ் சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது. இதை கவனத்தில் வைத்து மத்திய அரசு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருகிறது.

கொரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கைகளை சுத்தப்படுத்த சானிடைசர் எனப்படும் ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட கிருமி நாசினி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தேவை தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. 

ஆனால், வங்காளதேசம் உள்பட பல்வேறு வெளிநாடுகள் இந்தியாவில் இருந்து சானிடைசர்களை வாங்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் உள்நாட்டில் தேவை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வந்தது.

இந்நிலையில், உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமாக கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சானிடைசர் கிருமி நாசினியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com