பிரான்சில் கட்டுப்பாடு தளர்வு - 3 மாதத்துக்கு பிறகு ஈபிள் டவர் ஜூன் 25ல் திறப்பு

பாரிசின் பிரபல சுற்றுலா தலமான ஈபிள் டவர் 3 மாதங்களுக்குப் பிறகு ஜூன் மாதம் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.
ஈபிள் டவர்
ஈபிள் டவர்
Published on

பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலகப் புகழ்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபிள் லின் என்பவரின் பெயரை குறிக்கும் வகையில் இது ஈபிள் டவர் என பெயரிடப்பட்டது.

ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் என அனைவரும் இதனைக் கண்டுகளித்து வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தின. ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் மார்ச் 13-ம் தேதி மூடப்பட்டது.

இதற்கிடையே,  தற்போது பிரான்சில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாரிசின் பிரபல சுற்றுலா தலமான ஈபிள் டவர் 3 மாதங்களுக்குப் பிறகு நிபந்தனைகளுடன் ஜூன் மாதம் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கோபுரத்தின் முதல் தளம் மட்டுமே பார்க்க சுற்றுலாவாசிகள் அனுமதிக்கப்படுவர். 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம். படிக்கட்டு வழியே மட்டுமே ஏற வேண்டும். ஏறவும், இறங்கவும் தனித்தனியே வழிவகை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com