திறமை அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை- துரைமுருகன்

தமிழகத்தில் நியமிக்கப்பட்ட ஒரு துணைவேந்தர் கூட கல்வி மற்றும் திறமையின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை என்று துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். #duraimurugan #ViceChancellors #talent
திறமை அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை- துரைமுருகன்
Published on

பீளமேடு:

கோவை விமான நிலையத்தில் தி.மு..க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

காவிரி பிரச்சினையில் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை தட்டிகழிக்க பார்க்கிறார். இதுவரை இவர்கள் காவிரி பிரச்சினைக்காக என்ன செய்து விட்டார்கள். சாகின்ற காலத்தில் சங்கரா, சங்கரா, என்பது போல் பயிர் கருகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கர்நாடக முதல்-அமைச்சரை சந்திக்கிறேன் என்கிறார்.

கர்நாடக முதல்- அமைச்சர் பதவி காலம் முடிவடையும் நிலையில் அவர் தேர்தலை மனதில் வைத்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார். இப்போது வந்த புத்தி ஏன் முன்னாலே வந்து இருக்க கூடாது.

மேட்டூரில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது. பாசன பயிர்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்று முன்கூட்டியே தெரியவில்லையா?

துணை முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். காவிரி பிரச்சினையில் தண்ணீர்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்கிறாரே, காலம் தாழ்த்தி மத்திய அரசை கேட்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? நீட் வரும் போது பொறுத்து இருந்து பார்க்கலாம்.

ஆண்டாள் பிரச்சினையில் வைரமுத்து பெருந்தன்மையுடன் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். எனவே அதனை அப்படியே விட்டு விடவேண்டும்.

தமிழகத்தில் நியமிக்கப்பட்ட ஒரு துணைவேந்தர் கூட கல்வி மற்றும் திறமையின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. எல்லாம் கல்லா கட்டிவிட்டுத்தான் வந்தார்கள். அதற்கு பிறகு இங்கு கல்லா கட்டி வருகிறார்கள். அதன் காரணமாக மாட்டி கொண்டார்கள்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் தொடர்ந்து 5 ஆண்டுகள் முழுமையாக தமிழ்நாட்டில் தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். அது அவரது நம்பிக்கை. மேலும் அவர் தமிழில் பேசுவதற்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #duraimurugan #ViceChancellors

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com