தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெற இருந்த தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக
திமுக
Published on

சென்னை:-

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்படுகிறது.

கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com