மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர் கூட்டம்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. #DMK #MKStalin
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர் கூட்டம்
Published on

சென்னை:

சென்னையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது.

இதுகுறித்து பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நாளை (7-ந்தேதி) காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கழக ஆக்கப் பணிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதே போல் நாளை மாலை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தி.மு.க. சட்டமன்ற கொறடா சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் - சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (7-ந்தேதி) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தமிழக சட்டசபை 8-ந்தேதி கூடுவதையொட்டி அதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றியும், எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. #DMK #MKStalin #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com