கோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். #GirlHarassment #DMK #MKStalin
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
கோவை துடியலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.