சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்-ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

தி.மு.க. சார்பில் உச்சினி மாகாளியம்மன் கோவிலுக்கு கிரீடம், வேல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நலத்திட்ட உதவிகளை ராஜா எம்.எல்.ஏ. மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் வழங்கினர்.
விழாவில் ராஜா எம்.எல்.ஏ, சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய காட்சி.
விழாவில் ராஜா எம்.எல்.ஏ, சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் 27- வது வார்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் புனிதா அஜய் மகேஷ் குமார் ஏற்பாட்டில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கிரீடம் மற்றும் வேல் மற்றும் கருப்பசாமி கோவிலில் 1,000 லிட்டர் குடிநீர் தொட்டி வழங்குதல், கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா, நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அஜய்மகேஷ்குமார் வரவேற்றார்.

நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் சுப்புத்தாய், முத்துக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் அலமேலு, புஷ்பம், செல்வராஜ், வேல்ராஜ், 27-வது வார்டு அவை தலைவர் முப்பிடாதி, வார்டு துணை செயலாளர் ராசு, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com