மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். சிவகாசி டவுன் போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
Published on

விருதுநகர்

சிவகாசி நேரு காலனி துப்புரவு பணியாளர் குடியிருப்பை சேர்ந்தவர் லதா (வயது 44). இவரது மகன் ராம்குமார் (19). சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரோட்டின் குறுக்கே நாய் புகுந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

அப்போது பின்னால் அமர்ந்திருந்த லதா தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து லதாவின் மற்றொரு மகன் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com