அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பேட்டியளித்தார். பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க நகர, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
Published on

விருதுநகர்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையில் செயல்படுவது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கூட்டங்களை நடத்தி யாருக்கு ஆதரவு என தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க நகர, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நலன் கருதி ஒற்றை தலைமைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com