search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிகையையொட்டி 16,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசிய காட்சி. 

    பொங்கல் பண்டிகையையொட்டி 16,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    • சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும்.
    • அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அலகுமலையில் தனியார் பள்ளி விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து200 பேருந்துகள் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் இயக்கப்படும். சென்னை, மதுரை,கோவை,திருச்சி, போன்ற பெருநகரங்களில் இருந்து இந்த பேருந்துகள் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும். தீபாவளி பண்டிகையின் போது எவ்வாறு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் பொதுமக்களுக்கு குறை இல்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டதோ அதே போல் பொங்கல் பண்டிகைக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.தீபாவளி பண்டிகையின் போது சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அதிக கட்டணம் வசூலித்த 4 தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேட்டியின் போது உடன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க,செல்வராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார்,திருப்பூர் மாநகர தி.மு.க. தெற்கு செயலாளர் டி.கே.டி.நாகராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலுசாமி(கிழக்கு), அசோகன்(மேற்கு), ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×