கருகம்பாளையம் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம்

சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இச்சிப்பட்டி கிளை அஞ்சலகம் இணைந்து ஆதார் சிறப்பு முகாமை நடத்தியது.சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம் .
ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம் .
Published on

மங்கலம்:

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி-கருகம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இச்சிப்பட்டி கிளை அஞ்சலகம் இணைந்து ஆதார் சிறப்பு முகாமை நடத்தியது. இந்த முகாமில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி , மொபைல் எண் , பிறந்ததேதி போன்றவை மாற்றம் செய்து தரப்ப்பட்டது, 5வயது முதல் 15வயதுக்குட்பட்டோருக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் புதுப்பிக்கப்பட்டது.

மேலும் இம்முகாமில் பொதுமக்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்குகளும் துவங்கப்பட்டது. இந்த ஆதார் சிறப்பு முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி,துளசிமணிஆறுமுகம் மற்றும் அஞ்சலக பணியாளர்கள் நிவேதா,விஜய், பத்மஸ்ரீ, ஆறுமுகம், கிரி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் கருகம்பாளையம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com