பலத்த மழை:- பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை படத்தில் காணலாம்.
பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை படத்தில் காணலாம்.
Published on

உடுமலை:

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு திடீரென காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதும் பின்பு குறைந்து விடுவதுமாக உள்ளது.இதனால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அருவியில் குளித்து மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் ஆவலோடு திருமூர்த்தி மலைக்கு வந்தனர்.ஆனால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அதில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது.இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com