என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உடுமலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
  X

  கோப்புபடம். 

  உடுமலையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • கூட்டம் முடியும் வரை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

  உடுமலை:

  உடுமலை ஆர்டிஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு,ஒருகட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.மேலும் கூட்டம் முடியும் வரை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.ஆர்டிஓ. முன்னிலையில் நடந்த இந்த மோதலால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.எனவே இனி நடைபெறும் கூட்டங்களில் விவசாயிகளுக்கிடையேயான மோதலைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

  கூட்டத்தில் ஒரு விவசாயி ,ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் நாசா தெரிவித்த புள்ளி விபரங்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆர்டிஓ. வின் அதிகார வரம்புக்குள்ள விஷயங்கள் மற்றும் விவசாயிகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அவரை அமரச் செய்தனர்.

  Next Story
  ×