விமான சரக்கு கட்டணத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் - ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

பிரதமரின் ‘கதிசக்தி’ திட்டத்தில் சாலை, ரெயில்வே, துறைமுகம், விமான நிலையம் மேம்படுத்தப்படுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்துரையாடல் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சென்னையில் நடந்தது. 

இதில் பங்கேற்ற இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் பேசியதாவது:

பிரதமரின் ‘கதிசக்தி’ திட்டத்தில் சாலை, ரெயில்வே, துறைமுகம், விமான நிலையம் மேம்படுத்தப்படுகிறது. வரும் 2026ல் ரூ.375 லட்சம் கோடியாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த உள்கட்டமைப்புகள் கைகொடுக்கும்.அவசர கால கடன் திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கைகொடுக்கும். 

கொரோனாவுக்கு பின் சரக்கு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இதனால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான கட்டணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com