search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைக்கிள் பயணம் மூலம் சாதனை நிகழ்த்திய அரசு பஸ்கண்டக்டருக்கு பாராட்டு
    X

    பஸ் கண்டக்டருக்கு சான்றிதழ் - நினைவுப்பரிசு வழங்கியபோது எடுத்தபடம். 

    சைக்கிள் பயணம் மூலம் சாதனை நிகழ்த்திய அரசு பஸ்கண்டக்டருக்கு பாராட்டு

    • மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.
    • 110 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை படைத்தார்.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் சர்வதேச சைக்கிள் தினம் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழாவையொட்டி சாதாரண சைக்கிள் மூலம் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை நிகழ்த்திய அரசு போக்குவரத்து கழக நடத்துனர் அறிவழகனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் அறிவழகன். இவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். புகலூர், அன்னூர், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம், பொங்கலூர், அவிநாசிபாளையம், கொடுவாய், வழியாக தாராபுரம் வந்தடைந்தார். தாராபுரம் வந்தடைந்த கருணாகரனுக்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ,நகரச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    சாதாரண சைக்கிள் மூலம் 40 கிலோ எடையை சுமந்து கொண்டு 110 கிலோமீட்டர் தூரத்தை 11 மணி நேரத்தில் இடைவிடாது பயணம் செய்து உலக சாதனை படைத்தார்.அதனைத் தொடர்ந்து நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். அவருக்கு சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சாதனை படைத்த அறிவழகன் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    Next Story
    ×