கலெக்டர் தலைமையில் திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்26-ந் தேதி நடக்கிறது

காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண் 20-ல் நடை பெறவுள்ளது .நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் 26.4.2023 அன்று மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண் 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நடை பெறவுள்ளது .கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில்ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறைஅலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர்பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண்- உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.   

X

Maalai Malar
www.maalaimalar.com