என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் நூல் மில்லில் தீ விபத்து - பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
    X

    நூல் மில்லில் தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.

    வெள்ளகோவில் நூல் மில்லில் தீ விபத்து - பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

    • எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிய தொடங்கியது.
    • காங்கேயம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சரவணன் ( வயது 48) என்பவருக்கு சொந்தமான ஓயி நூல் மில் வெள்ளகோவில், செங்காளிபாளையம் ரோட்டில் உள்ளது.இந்த மில்லில் நேற்று பகல் திடீரென எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை அறிந்த மில் ஊழியர்கள் உடனடி யாக வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.தீயை அணைப்பதற்குள் எந்திரம், நூல் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாயிற்று.

    நல்வாய்ப்பாக ஊழியர்கள் யாருக்கு காயம் ஏற்படவி ல்லை .எரிந்து சேதமடைந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×