search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில் சிதலமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்
    X

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் பேசிய காட்சி.

    திருப்பூர் மாநகரில் சிதலமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்

    • சொத்து வரி உயர்வு, தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
    • அனைத்து பள்ளிகளிலும் தகுதி அடிப்படையில் திறமைவாய்ந்த ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட பார்வையாளர் ஜி.கே.செல்வகுமார், கோவை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலகுமார், ஈரோடு கோட்ட பொறுப்பாளர் பாய்ண்ட் மணி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் காடேஸ்வரா தங்கராஜ், பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் நடராஜ், மற்றும் நிர்வாகிகள் ,செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, தமிழக அரசுமின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்லடம் பேருந்து நிலையம் அருகே திருச்சி கோவை மெயின் ரோட்டில் மேம்பாலம் பணி மற்றும் நிதி ஒதுக்கிய பல்லடம் புறவழிசாலை திட்ட பணியை விரைவில் துவங்கவேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுபள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள்இல்லாமல் மாணவர்களின் கல்வி இன்று கேள்விகுறியாக இருக்கிறது. அனைத்து பள்ளிகளிலும் தகுதி அடிப்படையில் திறமைவாய்ந்த ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில் சாலைகள் மிக மோசமாக பயன்படுத்த முடியாதஅளவில் உள்ளது. அதனால் விபத்துகள் அதிக அளவில் நடந்து உயிரிழப்புகள்ஏற்படுகிறது. அதை மாநில அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும்.

    பெண்கள் இலவச பயணம் என்ற நடைமுறைக்கு பின் டவுன்பஸ் எண்ணிக்கையைகுறைத்துவிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.மத்திய அரசின் ஆவாஸ்யோஜனா (அனைவருக்கும் வீடுகட்டும்திட்டம்) ஏழைமக்களுக்கான மத்திய அரசின் இத்திட்டத்தினை மாநில அரசு சரிவரசெயல்படுத்துவதில்லை .திட்டத்தினை மாநில அரசு ஏழை மக்களுக்கு கொண்டு செல்லும்வகையில் செயல்படுத்த வேண்டுகிறோம்.

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர்கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்க போட்ட தீர்மானத்தை திருப்பூர் மாநகராட்சி ரத்து செய்து முன்னாள்சேர்மன் கே.என். பழனிச்சாமி கவுண்டர் பெயரை வைக்கவேண்டும்.ஆழியாறு-நல்லாறு இணைப்பு பணியை விரைவில் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×