search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாநகரில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

    • ஹாட்ஸ்பாட்டாக தேர்வு செய்து கூடுதல் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தற்போதைக்கு தொற்று கட்டுக்குள் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு நேரு வீதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கடந்த மாதம் 22ந் தேதி உடல் நலம் பாதிப்பால் கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.பரிசோ தனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட து. அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி இறந்தார்.இதையடுத்து மாநகராட்சி சார்பில், மூதாட்டி குடி யிருந்த பகுதியில் முதல் மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வை யில், ஆய்வா ளர் கோகுல்நா தன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டனர். வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ப்பட்டது.யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என கேட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டது. பொது மக்களிடம் கூட்டமாக உள்ள பகுதியில் செல்லும் போது, முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவு ங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா தொற்று பர வலை தடுக்கும் வகை யில், ஹாட் ஸ்பாட் பகுதி களை கண்டறிந்து தடுப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள சுகாதார த்துறை தீவிரம் காட்டுகிறது.கடந்த 7மாத ங்களில் இல்லாத வகையில் நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்புளூ யன்சா, சுவாச பிரச்னை ஏற்படக்கூடிய பிற நோய் தொற்று, இதற்கு முன் மற்ற காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவிய இடங்க ளை கண்டறிந்து அப்பகுதி களை ஹாட்ஸ்பா ட்டாக தேர்வு செய்து கூடுதல் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிட ப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்து றை அலுவலர்கள் கூறுகை யில், தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டு, இறப்பை தழுவினால், அதற்கான காரணம் என்ன, இணை நோயா, எப்படி தொற்று வந்தது என்பது குறித்து ஆராயப்படுகிறது. தற்போதைக்கு தொற்று கட்டுக்குள் உள்ளது. கடந்த கொரோனா அலையின் போது ஒன்றுக்கும் மேற்ப ட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட பகுதி ஹாட் ஸ்பாட்டாக கருதி, கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்த ப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்ப டுகிறது என்றனர்.

    Next Story
    ×