ரேஷன் அரிசியை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்ற வாலிபர் கைது

சாா்பு ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீசார் ஆத்துப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினா். 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூா் ஆத்துப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கிவைத்து கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சாா்பு ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீசார் ஆத்துப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினா். இந்த சோதனையின்போது ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசாா், இது தொடா்பாக திருச்சி மாவட்டம், தாராநல்லூரைச் சோ்ந்த ஏழுமலை (வயது 33) என்பவரை கைது செய்தனா். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com