search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம்  அருகே ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்ற பசுமாடு
    X

     ஒரே பிரசவத்தில் மூன்று கன்றுகள் ஈன்ற பசு மாடு.

    பல்லடம் அருகே ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்ற பசுமாடு

    • கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாலை அழைத்து வந்துள்ளனர்
    • 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறந்து போனது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 45). விவசாயியான இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். அவர் வைத்திருந்த ஒரு பசு மாடு கன்று போடும் நிலையிலிருந்தது. சம்பவத்தன்று மாலையில் கன்று போடக் கூடிய அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் வெகு நேரமாகியும் பசுமாடு கன்றுபோட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து அவரது உறவினர் மூலம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபாளையத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்ற உதவி கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாலை அழைத்து வந்துள்ளனர். அவர் சம்பவ இடத்திற்கு வந்து பசு மாட்டின் வயிற்றிலிருந்து மூன்று கன்றுகளை வெளியே எடுத்துள்ளார். இதில் 3 கன்றுகளுமே காளைக்க ன்றுகளாக இருந்துள்ளது. ஆனால் 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறந்து போனது. ஒரு கன்றுக்குட்டி மட்டுமே கால்நடை மருத்துவரால் காப்பாற்ற முடிந்தது. இதனால் விவசாயி நவநீதன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரி யத்தை ஏற்படுத்தினாலும், அதில் இரண்டு கன்றுகள் இறந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×