பல்லடம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

3 லிட்டர் கள்ளச்சாராயம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராய ஊறல்களை அழித்தனர்.
கைதானவர்களை படத்தில் காணலாம். 
கைதானவர்களை படத்தில் காணலாம். 
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(வயது 40) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 3 லிட்டர் கள்ளச்சாராயம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தை சேர்ந்த சின்னதுரை(45)என்பவர் அவருக்கு கள்ளச்சாராயம் விநியோகம் செய்தது தெரிய வந்தது.இதையடுத்து சுக்கம்பாளையத்திலுள்ள சின்னதுரை வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு பதுக்கி வைத்திருந்த 5 லிட்டர் கள்ளச்சாராய பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராய ஊறல்களை அழித்தனர். மேலும் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அடுப்பு, சிலிண்டர், பாத்திரங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர்கள் இருவரிடமும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com