அவினாசி அருகே கஞ்சா விற்ற 2பேர் கைது

அவினாசி போலீசார் சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர்.400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மஞ்சை குமார், பவன்குமார்.
கைது செய்யப்பட்ட மஞ்சை குமார், பவன்குமார்.
Published on

அவினாசி :

அவினாசிஅருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் அவினாசியைஅடுத்து பழங்கறை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சை குமார் (வயது 24) மற்றும் பவன்குமார்(28) என்பதும் அவர்கள் கஞ்சா வைத்திருந்தததும் தெரியவந்தது. எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com