வள்ளியூர் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

வள்ளியூர் அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறிவிழுந்த பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓடும் பஸ்சில் இருந்து தவறிவிழுந்த பெண்.
ஓடும் பஸ்சில் இருந்து தவறிவிழுந்த பெண்.
Published on

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் காளி. இவரது மனைவி சுந்தரி. இவர் இன்று காலை தனது மகன்களை பள்ளி அழைத்து செல்வதற்காக திருச்செந்தூரில் இருந்து வள்ளியூர் செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

பஸ் சமூகரெங்க புரம் பிள்ளையார் கோவில் வளைவில் சென்ற போது பஸ் படிகட்டு அருகே நின்று கொண்டு இருந்த சுந்தரி தவறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த பயணிகள் அலறினர். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com