நெல்லையில் 500 பேருக்கு இனிப்பு வழங்கி தி.மு.க.வினர் கொண்டாட்டம்

கருணாநிதி பிறந்த நாளையொட்டி நெல்லையில் 500 பேருக்கு இனிப்பு வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர்.
முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.
முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.
Published on

நெல்லை:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகர தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் தலைமை தாங்கினார்.

தச்சநல்லூர் கிழக்குப்பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தச்சை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நெல்லை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஆ.க.மணி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் ஆகியோர் வரவேற்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது. 

இதில் மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, பாளை பகுதி செயலாளர் பூக்கடை அண்ணாதுரை, மானூர் ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி, வடகரை கிளை செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பிரதிநிதி தொப்பி மைதீன், நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கண்காணிப்பு குழு உறுப்பினரும், நெல்லை பேட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளருமான மணிகண்டன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

முன்னதாக அங்கு அலங்கரித்து வைக்க ப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலு த்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை தச்சநல்லூர் கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனுமான தச்சை  சுப்பிரமணியன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com