திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா இன்று தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் தலைமையில் கொடி பட்டம் பதியைச் சுற்றி வந்த போது எடுத்த படம்
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் தலைமையில் கொடி பட்டம் பதியைச் சுற்றி வந்த போது எடுத்த படம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கடற் கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா இன்று காலையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

முன்னதாக கொடி பட்டம் பதியைச்சுற்றி வந்து பதியை வந்தடைந்தது. பின்னர் கொடி மரத்தில் கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றினார். கொடி யேற்றத்தை தொடர்ந்து காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாக னத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம்,12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவி டையம் நடைபெற்றது

பகல் 1மணிக்கு அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது.

11நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது

இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வை குண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம்,, கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தர பாகவதர் குமார் ஜெய ராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

கலந்து கொண்டவர்கள்

திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார், அன்பாலயம் அகில பாரத அய்யாவழி மக்கள் பேரி யக்க தலைவர் குரு சிவ சந்திர சுவாமிகள், அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோ சகர் வக்கீல் சந்திரசேகர், நிர்வாக குழு உறுப்பி னர்கள் லட்சு மணன், ராமமூர்த்தி, முத்து குட்டி, பால கிருஷ்ணன், செல்வக் குமார், ஆதி நாரா யணன், ரத்தின பாண்டி, சுதேசன், இளங்கோ, உறுப்பினர்கள் சிவாஜி, வினோத், கண்ணன், கார்த்திக், வரத ராஜன், ஹரிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் விஜய குமார்,பால்சாமி, ராஜ துரை, கோபால், இணை செ யலாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்க கிருஷ் ணன், செல்வின், வரத ராஜ பெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com