search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் நகராட்சியில் குப்பை கொட்ட இடம் கேட்டு கலெக்டரிடம்,  சேர்மன் மனு
    X

    சங்கரன்கோவில் நகராட்சியில் குப்பை கொட்ட இடம் கேட்டு கலெக்டரிடம், சேர்மன் மனு

    • உரக்கிடங்கு உபயோகத்தில் இருந்த இடத்தில் தற்போது தினசரி சந்தை, வாட்டர் டேங்க் என பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • நகராட்சி பகுதியில் திறந்த வெளி வாறுகால்கள் சுமார் 75 கி.மீ நீளம் உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ஏற்கனவே உரக்கிடங்கு உபயோகத்தில் இருந்த இடத்தில் தற்போது பயோமைனிங் முறையில் பழைய குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு அந்த இடங்கள் தினசரி சந்தை, வாட்டர் டேங்க் என பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள குப்பைகளும் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது நகராட்சி பகுதியில் திறந்த வெளி வாறுகால்கள் சுமார் 75 கி.மீ நீளம் உள்ளது. அவற்றை தினமும் சுத்தம் செய்து அகற்றப்படும் வாறுகால் கழிவுகள் மற்றும் மண்ணையும் உரமாக்கிய பிறகு மீதமுள்ள மரக்கழிவுகள் போன்றவற்றை கொட்ட உரக்கிடங்கு தேவைப்படுகிறது. எனவே வாறுகால் கழிவுகள், மண்ணை கொட்டுவதற்கு தகுந்த இடத்தினை தேர்வு செய்து வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது நகராட்சி கமிஷனர் சபாநாயகம், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×