கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

செங்கோட்டையில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்த போது எடுத்தபடம்.
கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்த போது எடுத்தபடம்.
Published on

செங்கோட்டை:

செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் வாசுதேவநல்லுார் வடக்கு ஒன்றியம் தென்மலையை சார்ந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகி புஷ்பராஜ், தென்மலை கூட்டுறவு சங்க தலைவர் உமேஸ்வரன் உறுப்பினா் செல்லையா மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் கடையநல்லுார் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனா். புதியதாக கட்சியில் இணைந்த அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லுார் வடக்கு ஒன்றிய செயலாளா்மூர்த்திபாண்டியன், கிளைச்செயலாளா் மாரியப்பன், வார்டு பிரதிநிதி முருகன், வீரபாண்டியன், பெரியதுரை, பால்கருப்பையா, செல்வம், சமுத்திரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com