

தென்காசி:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் பொருட்டு நேற்று முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு காரணத்தினால் எந்த ஒரு உணவகமும் இல்லாத நிலையில் குடும்பம் இன்றி சாலையோரம் தவித்த நபர்களுக்கு தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவல் துறையினர் இணைந்து கடந்த வாரம் போலவே இந்த வாரமும் உணவின்றி பசியில் தவித்த நபர்களுக்கு உணவளித்து காவல்துறை உங்கள் நண்பன் என்பதை உணர்த்தினர்.