search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில்நுட்ப கோளாறு: சென்ட்ரல்-விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்வே திடீர் நிறுத்தம்
    X

    தொழில்நுட்ப கோளாறு: சென்ட்ரல்-விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்வே திடீர் நிறுத்தம்

    • மெட்ரோ ரெயில் சேவையில் சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில்கள் இயக்குவதில் சிறிது நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மெட்ரோ ரெயில் சேவை 45 நிமிடங்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    சென்னை:

    சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயிலில் சேவை தற்போது இயங்கி வருகிறது. மெட்ரோ ரெயில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    அலுவலகங்களுக்கு செல்வோர் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் 5 நிமிடத்திற்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் சேவையில் சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில்கள் இயக்குவதில் சிறிது நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் 6 நிமிட இடைவெளியிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 6 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதேபோல் சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    மெட்ரோ ரெயில் சேவை 45 நிமிடங்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். காலையில் அலுவலகத்துக்கு செல்லக்கூடியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இதற்கிடையே தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் சேவை தொடங்கியது.

    Next Story
    ×