ஒற்றையால் விளையில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற விஜய் வசந்த்

கன்னியாகுமரி அருகே ஒற்றையால் விளையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி தீவிரம்.பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11.8 லட்சம் ஒதுக்கீடு.
ஒற்றையால் விளையில் புதிய அங்கன்வாடி கட்டிடம்: அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற விஜய் வசந்த்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே ஒற்றையால் விளையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குமரி கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி உதயம், வட்டாரத் தலைவர் சாம் சுரேஷ்குமார் மற்றும் காங்கிரஸ், திமுக கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com