பணகுடி அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

பணகுடி அருகே விபத்து வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பணகுடி:

நெல்லை மாவட்டம் ஊரல்வாய்மொழி சூச்சிகுளத்தை சேர்ந்தவர் மணி என்ற மாசிலாமணி. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது மகனுக்கு புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கிவிட்டு சொந்த ஊருக்கு வள்ளியூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காவல்கிணறு மங்கம்மாள் சாலை விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பணகுடி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர் கஜேந்திரன் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை அருகில் உள்ள கேமிராக்கள் மூலம் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com