மேகதாது விவகாரம்: தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் துறைமுருகன்

மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும் என்று அமைச்சர் துறைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் துறைமுருகன்
தமிழக அமைச்சர் துறைமுருகன்
Published on

மேகதாது விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்ப பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர் துறைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.

மேகதாதுவில் அணைக் கட்டுவது தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரைத் தடுப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும்.

கர்நாடக அரசின் முயற்சி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதாகும். மேகதாது திட்டத்தை தடுக்க சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com