மணப்பாறை மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பி ஓட்டம்

பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று நள்ளிரவு இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களை சமாதானப்படுத்தி, 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
மணப்பாறை மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பி ஓட்டம்
Published on

மணப்பாறை:

திருச்சி மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று நள்ளிரவு இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்காணித்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் இருவரும் காயம் அடைந்தனர்.

இது குறித்து வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களை சமாதானப்படுத்தி, 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் மணமேல்குடியை சேர்ந்த மாதவன்(வயது 22), திருப்பூர் தாராபுரத்தை சேரந்த ஆகாஷ்(22) என்பது தெரிய வந்தது.காயமடைந்த அவர்கள் இருவரையும் போலீசார், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரில் ஒருவரான ஆகாஷ் திடீரென மாயமாகி உள்ளார். போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர் தப்பி ஓடியதை தொடர்ந்து மணப்பாறை முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினர். தொடர்ந்து அவர் எங்கு சென்றிருக்க கூடும் என்பது குறித்து விசாரணை நடத்தி போலீசார் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் காவலில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com