வள்ளியூர் அருகே பசு மாட்டின் மூக்கில் அதிசய கொம்பு

வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரியைச் சேர்ந்த தவசி என்பவரது மாட்டின் மூக்கின் இரு துவாரத்திலும் புதிதாக கொம்பு முளைத்துள்ளது.
பசு மாட்டின் மூக்கில் முளைத்துள்ள அதிசய கொம்பு
பசு மாட்டின் மூக்கில் முளைத்துள்ள அதிசய கொம்பு
Published on

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரியைச் சேர்ந்த தவசி என்பவர் 25 பசு மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இவர் சமீபத்தில் 7 நாட்களுக்கு முன் புதிதாக ஒரு பசு மாடு ரூ. 15 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார்.

இந்த மாட்டின் மூக்கின் இரு துவாரத்திலும் புதிதாக கொம்பு முளைத்துள்ளது. இதனை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இருந்தாலும் 25 வருடங்களாக மாடு மேய்க்கும் தொழில் செய்து வரும் நம்பி என்பவர் கூறுகையில், பல ஆண்டுகளாக நான் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறேன்.

இருந்தாலும் பன்றியின் மூக்கில்தான் இவ்வாறு கொம்புகள் வளர்வதை நான் பார்த்திருக்கிறேன். முதன்முறையாக மாட்டின் மூக்கில் கொம்பு வளர்ந்ததை நான் இப்போதுதான் பார்க்கிறேன் எனவும், இவ்வாறு கொம்பு முளைப்பது நல்லது இல்லை என்றும். இது குடும்பத்துக்கு ஆகாது அதனால் உடனடியாக மாட்டை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com