search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்- ஆதரித்து இனிப்பு வழங்கியவர்களால் பரபரப்பு
    X

    காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்- ஆதரித்து இனிப்பு வழங்கியவர்களால் பரபரப்பு

    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
    • ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.

    மதுரை:

    பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் வருடந்தோறும் நூதன போராட்டங்களை நடத்தி வருவது வழக்கம். அதன்படி காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் தெரிவித்து இருந்தது. இதையொட்டி நகரில் உள்ள ராஜாஜி பூங்கா, சுந்தரம் பார்க், நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் பூங்கா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை தொண்டர்களுடன் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கம்-பண்பாட்டுக்கு காதலர் தினம் எதிரானது. எனவே அதனை இளைஞர்கள் கொண்டாடக்கூடாது. புல்வாமா தாக்குதலை நினைவு கூறும் வகையில் பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்க வேண்டும்" என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.

    காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்படி இன்று காலை ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் அங்கு வந்திருந்த புதுமண தம்பதிகளுக்கு இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ஒரே இடத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஆதரித்து இனிப்பும் வழங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×