search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் 1800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
    X

    காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் 1800 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

    • திருவள்ளூர் மாவட்டத்தில் 800 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • 3200 பணியாளர்கள் மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க கொரோனோ தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1859 இடங்களில் கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 800 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 3200 பணியாளர்கள் மூலம் 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் மட்டும் 12 தடுப்பு முகாமில் 57 பேர் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை நடந்த 32 கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 16லட்சத்து 99 ஆயிரத்து 904 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 1,059 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தடுப்பூசி முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பரிந்துரைக்கப்பட்ட 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் மற்றும் இதுவரை போடாத முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்எச்சரிக்கை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டு தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.

    18 முதல் 59 வயதினருக்கு செப்டம்பர் 30-ந்தேதி வரை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×