அன்னையர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்

உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!
அன்னையர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்
Published on

சென்னை:

இன்று சர்வதேச அன்னையர் தினம். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கோபாலபுரம் சென்று, தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் மனைவி துர்காவும் உடன் சென்றிருந்தார்.

மகன் மு.க.ஸ்டாலினை கண்டதும் தயாளு அம்மாள் சந்தோஷ மிகுதியில் மு.க.ஸ்டாலினின் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தார். அதன் பிறகு சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு தனது தாயாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com