வேப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து- 2 வயது குழந்தை உள்பட 4 பேர் பலி

பலியானவர்கள் அஜித், மதுமிதா என்பதும் மற்ற 2 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து- 2 வயது குழந்தை உள்பட  4 பேர் பலி
Published on

வேப்பூர்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அஜித் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.கம்பனியில் பணிபுரிந்து வந்தார்.

அஜித் சென்னையில் இருந்து காரில் தனது மனைவி மதுமிதா (23), மகள் ஜனனியா பிரித்தி (2), மாமியார் திண்டுக்கல் நாகல் நகர் ரெயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (47) ஆகியோருடன் ஆண்டிபட்டி சென்றார். காரை அஜித் ஓட்டினார்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் கோமுகி ஆற்றின் அருகே கார் வந்த போது நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

இதில் பலத்த காயமடைந்த அஜித், அவரது மனைவி மதுமிதா, மகள் ஜனனியா பிரித்தி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த தமிழ்செல்வியை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆனது.

வேப்பூர் போலீசார் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com