search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரம் அருகே வெடி வைத்து காட்டு பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது
    X

    பென்னாகரம் அருகே வெடி வைத்து காட்டு பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது

    • பிரகாஷ், பெருமாள் ஆகிய 4 பேரும் காட்டு பன்றிக்கு வெடி வைத்து வேட்டையாடி இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்தனர்.
    • 4 பேரை வனத்துறையினர் கைது செய்து அபராதமாக ரூ.90 ஆயிரம் வசூலித்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப் பகுதியில் காட்டுப்பன்றியை வெடிவைத்து வேட்டையாடி சமைத்ததாக 4 பேரை பென்னாகரம் வனத்துறையினர் கைது செய்து அபராதம் வசூலித்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மூங்கில்மடுவு கிரமத்தையொட்டி உள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவின் பேரில் பென்னாகரம் வனசரக அலுவலர்கள் செந்தில்குமார், ஆலயமணி, வனவர்கள் புகழேந்திரன், முனுசாமி, சக்திவேல் மற்றும் வனப்பணியாளர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மூங்கில் மடுவு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், மாது, சிடுவம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், பெருமாள் ஆகிய 4 பேரும் காட்டு பன்றிக்கு வெடி வைத்து வேட்டையாடி இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்தனர். உடனே 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து அபராதமாக ரூ.90 ஆயிரம் வசூலித்தனர்.

    மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்கள் மீது வன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பென்னாகரம் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×