உடுமலை அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகளை கடத்திய 3 பேர் கைது

மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது. அவர்கள் கொண்டு வந்த பைகளில் சந்தனக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடுமலை அருகே ரூ.5 லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகளை கடத்திய 3 பேர் கைது
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி வனச்சரகம் அரளிப்பாறை என்ற இடத்தில் 3 மர்ம நபர்கள் நபர்கள் கையில் பைகளுடன் வந்து கொண்டிருந்தனர். வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது. அவர்கள் கொண்டு வந்த பைகளில் சந்தனக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் விசாரித்த போது கேரள மாநிலம் காந்தலூரை சேர்ந்த மயில்சாமி (வயது 37), பால்ராஜ் (43), சக்தி வேல்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 13 கிலோ சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

சந்தனக்கட்டைகளை எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து கைதானவர்களிடம் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், அமராவதி வனச்சரகர் சுரேஷ், வனவர் செந்தில்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com