வெள்ளத்தில் சிக்கிய 20 கிலோ மீன்

எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கிய 20 கிலோ மீன்
Published on

சென்னையில் மிச்சாங் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த பெரும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

வீடுகள், கடைகள் என எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

சென்னை வெள்ளம் தொடர்பாக பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கலங்க வைத்து வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க சென்னை வெள்ளத்தில் சில இடங்களில் வலை வீசி மீன்களை பிடித்து வருகின்றனர்.

இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சென்னை அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மீனவர் ஒருவர் வலைவீசி மீன்களை பிடித்தார். அப்போது இதுவரை இல்லாத வகையில் 20 கிலோ எடை கொண்ட மீன் சிக்கியது. இதனை பிடித்த மகிழ்ச்சியில் அதனை படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com