search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட 100 வியாபாரிகளுக்கு தலா  ரூ.5 ஆயிரம் உதவித்தொகை
    X

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட 100 வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை

    • பாதிக்கப்பட்ட வணிகர்களை கணக்கெடுத்து உதவி கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
    • மாவட்ட பொருளாளர் சத்திய ரீகன் நன்றி கூறினார்.

    சென்னை:

    சென்னையில் மிச்சாங் புயல் மழையால் பெரும் பாதிப்பு அடைந்த சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்துக்கு கைகொடுக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அல்லது ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானித்து செயல்பட்டு வருகிறது.

    மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட வணிகர்களை கணக்கெடுத்து உதவி கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி அயனாவரத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் அயனாவரம் எஸ். சாமுவேல் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு உதவித் தொகையை வழங்கினார். முதற்கட்டமாக மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள வணிகர்களுக்கு தலா ரூபாய் 5000 வீதம் 100 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

    பேரமைப்பின் சென்னை மண்டல தலைவர் ஜோதி லிங்கம், தலைமை நிலைய செயலாளர் ராஜ்குமார் மாநில இணைச்செயலாளர் பால சண்முகம், அயன்புரம் வியாபாரிகள் ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் அருள்குமார் பொருளாளர் சுயம்பு, இளம் தொழில் முனைவோர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கேவி கதிரவன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் ஷேக் முகைதீன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சத்திய ரீகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×