75-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மரியாதை செலுத்திய மு.க. ஸ்டாலின்
மரியாதை செலுத்திய மு.க. ஸ்டாலின்
Published on

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மெரினாவில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லி  ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

குஜராத் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில் காந்தியின் சுவரோவியத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com