மதுக்கூர் கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு பேச்சு பேட்டி

பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமை–களை வெளிப்படுத்தினர். முன்னாள் பள்ளி மாணவர்களின் நேசகரங்கள் சார்பாக நூலகத்திற்கு 10 பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Published on

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள மதுக்கூர் கிளை நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவி–க்கும் வகையில் பேச்சு மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.

போட்டிகான ஏற்பாடுகளை நூலகர் அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார், இதில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோருடன் வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமை–களை வெளிப்படுத்தினர்.

இதில் வர்த்தக சங்க கவுரவ ஆலோசகர்கள் எஸ்.எஸ்.பி.பிரகாசம், சரவணன் வர்த்தக சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் மெட்ரோ.சேகர், வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரன் சமூக ஆர்வலர்கள் முஜிபுர் ரஹ்மான், நவமணி, சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி–களுக்கு பரிசளித்தனர்.

இறுதியாக முன்னாள் பள்ளி மாணவர்களின் நேசகரங்கள் சார்பாக நூலகத்திற்கு 10 பிளாஸ்டிக் சேர்கள் வழங்கப்பட்டது.

முடிவில் மதுக்கூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் துணைத் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் துரையரசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com