அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்:கலெக்டர் வலியுறுத்தல்

அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.விவசாயிகள் முழுமையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்:கலெக்டர் வலியுறுத்தல்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான் குடி ஆகிய பகுதிகளில் வேளாண்துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் பொறியியல் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மானியத்துடன் கூடிய வேளாண் இடு பொருட்கள் மற்றும் உயிர் உரங்கள், நிலத்தின் தன்மை கேற்றவாறு பயிரிடுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள், சோலார் மின்வசதி, ஆழ்துளை கிணறு ஏற்படுத் துதல் மற்றும் காய்கறி, பழ விதைகள் உள்ளிட்ட பல் வேறு வசதிகளை அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு அவர்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடைகோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழு மையாக அறிந்து பயன் பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) முரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர்கள் ரவிசங்கர், தங்கபாண்டியன், உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com