search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒற்றைத்தலைமை,அது பொதுச்செயலாளர் என்ற கருத்தில் மாற்றமில்லை: மெஜாரிட்டி இருந்தால் ஓ.பி.எஸ். நிரூபித்துக்கொள்ளலாம்- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
    X
    பேட்டியளித்த கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.


    ஒற்றைத்தலைமை,அது பொதுச்செயலாளர் என்ற கருத்தில் மாற்றமில்லை: மெஜாரிட்டி இருந்தால் ஓ.பி.எஸ். நிரூபித்துக்கொள்ளலாம்- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி

    • அ.தி.மு.க. பொதுக்குழுவின் மையக் கருத்தாக இருந்தது ஒற்றைத்தலைமை தான்.
    • எப்போது பொதுக்குழு கூட்டினாலும் பொதுக்குழுவின் மையக்கருத்து ஒற்றை தலைமை தான். மெஜரிட்டி இருந்தால் ஓ.பி.எஸ். நிரூபித்துக்கொள்ளலாம்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், தற்பேதைய எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழுவின் மையக் கருத்தாக இருந்தது ஒற்றைத்தலைமை தான்.நீதிமன்ற தீர்ப்புகள் மாறுபட்ட தீர்ப்பாக வரலாம். அதனை இறுதி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள முடியாது.எங்களுடைய கொள்கை இனிமேல் ஒற்றை தலைமை தான்.

    தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்வது அல்லது பொதுக்குழு கூட்டுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.எப்போது பொதுக்குழு கூட்டினாலும் பொதுக்குழுவின் மையக்கருத்து ஒற்றை தலைமை தான். மெஜரிட்டி இருந்தால் ஓ.பி.எஸ். நிரூபித்துக்கொள்ளலாம்.

    பொதுக்குழுவில் ஒற்றை தலைமைக்கு போட்டி போடுவதை விட்டு நீதிமன்றம் சென்றது உகந்தது கிடையாது.கட்சிகள் பற்றி நீதிமன்றம் கருத்து சொல்ல முடியும், சில தீர்ப்புகளை சொல்லமுடியும். ஆனால் அது நிரந்தரம் கிடையாது.

    கட்சியை வழி நடத்துவது கட்சி நிர்வாகிகள் தான். ஒற்றைத்தலைமை அது பொதுச்செயலாளர் என்ற கருத்தில் மாற்றமில்லை. இ.பி.எஸ் - ஓ.பி.எஸ். இருவரும் சேர்ந்து பொதுக்குழு கூட்டுவது குறித்து தலைமை தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×