என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
  X

  பலியான கஜேந்திரன்

  மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடைக்கு சென்ற கஜேந்திரன் அங்கு இருந்த‌ மின்சார எர்த் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து‌ள்ளார்.
  • கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  வல்லம்:

  தஞ்சை அருகே உள்ள நாகப்ப‌உடையான்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் என்பவரின் மகன் கஜேந்திரன் (வயது 13). இவர் மருங்குளம் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கஜேந்திரனின் வீட்டின் அருகே அவருடைய உறவினர் பால் கடை வைத்துள்ளார். அந்த கடைக்கு சென்ற கஜேந்திரன் அங்கு இருந்த‌ மின்சார எர்த் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்து‌ள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து கஜேந்திரன் மயங்கி விழுந்தார்.

  தகவலின்பேரில் வந்த 108 ஆம்புலன்ஸில் வந்த‌ மருத்துவ பணியாளர்கள் மயங்கி கிடந்த கஜேந்திரனை சோதனை செய்தனர். பின்னர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ‌ இடத்திற்கு வந்து மாணவர் கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்த புகாரின் ேபரில் வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×